‘நாவற்குழி கிழக்கில் உள்ள காணியொன்றினுள் இருந்து இரண்டு குண்டுகள் இன்று நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன’ என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னர் இராணுவ முகாமாக இருந்து விடுவிக்கப்பட்ட 3 ஏக்கர் காணியை துப்புரவு செய்யும் பணிகள் புதன்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, காணிக்குள் குண்டுகள் இருப்பது இனங்காணப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் உதவியுடன் குண்டுகளை மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீட்கப்பட்ட குண்டுகளை விசேட அதிரடிப் படையினர் இன்று மாலை செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.