இராணுவம் எனக்கூறி மிரட்டிய இருவர் கைது

arrestதம்மை இராணுவம் எனக்கூறி வல்வெட்டித்துறை ஆலடி வீதியைச் சேர்ந்த இருவரை மிரட்டிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் சனிக்கிழமை (09) தெரிவித்தனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் கூறுகையில்,

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) மாலை 5.30 மணிக்கு ஆலயடியிலுள்ள வீட்டுக்கு சிவில் உடையில் சென்ற மூவர், தாங்கள் இராணுவத்தினர் என்றும், உங்களை சுடுவோம் என்றும் கூறிச் சென்றனர்.

இதனால் அச்சம் கொண்ட, வீட்டிலிருந்த இருவரும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு அதேயிடத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் கூறினர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3ஆவது நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.