இராணுவத் தளபதியால் யாழ்பாணத்தில் மற்றுமொரு வீடு கையளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் கிராண்ட் பஜாரில் இராணுவத்தால் வரிய குடுமபத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டை (12)கையளித்தார்.

யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட அன்றைய பிரதம விருந்தினரான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இராணுவத்தால் கட்டப்பட்ட வீட்டின் சாவியை பயனாளியான திருமதி. கருணாநிதி ஜெகதிஷ்வரன் அவர்களுக்கு வழங்கினார்.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் , இந்த புதிய வீட்டைக் கட்டுவதற்கு தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் மனிதவள ஒத்துழைப்பை வழங்கியது.

கிராம சேவா மற்றும் வீடமைப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகத்தால் கட்டுமானத்திற்கான நிதி பங்களிப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

512 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு மிகவும் தேவையான மனித சக்தியை 14 வது கஜபா படையணியின் படையினர் வழங்கியதுடன், சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கான நேரத்தில் வீடு நிறைவு பெற்றது.

மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக செயலாளர், யாழ்ப்பாண காணி அதிகாரிகள், 51வது படைப் பிரிவு தளபதி, 511 மற்றும் 512 படைப்பிரிவுத் தளபதிகள் , மூத்த அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கட்டுமானத்தில் பங்களித்த படையினர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor