இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக குடும்ப விவரங்களை மீண்டும் திரட்டுகின்றனர்

army-jafnaயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீண்டும் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப அட்டையை பார்வையிடுவதுடன் வீட்டில் வசிப்பவர்களின் விவரங்களையும் பதிவு செய்வதுடன் வீட்டில் உள்ள பயன்தரு மரங்களின் விவரங்களையும் சேகரித்துச் செல்கின்றனர்.

அத்துடன் கடந்த காலத்தில போராளிகளாக இருந்தவாகள் மற்றும் தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலையானவர்களின் விவரங்களையும் பதிவு செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாகியுள்ளனர். தவிர எத்தகைய முன்னறிவிப்பும் இல்லாது குடும்ப விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.