Ad Widget

இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன்.- முதல்வர் விக்கி சூளுரை!

அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­முறைப் படுத்­தாது விடு­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. வடக்கு மாகா­ண­ச­பைக்கு மத்­திய அர­சாங்கம் போடும் முட்டுக் கட்­டைகள் இத­னையே காட்டுகின்றன என சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப் பிவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகைய உயிரிழப்பை பாக்கியமாகவே கருதுவேன் என்றும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.
முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ­க­ணேசன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் நேற்­று­மாலை சந்­தித்துப் பேசினர். இந்தச் சந்­திப்­பின்­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கருத்துத் தெரி­வித்­துள்ளர். ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் மரி­யாதை நிமித்தம் இந்தச் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்­தனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்:
13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­முறைப் படுத்­தாது விடு­வ­தற்கே அரசாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக கூறி 13ஆவது திருத்தச் சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாது விடு­வதே அரசின் திட்­ட­மா­க­வுள்­ளது. இது­வரை எமக்கு இது­பற்றி தெரி­­யாமல் இருந்­தது. தற்­போது வட­மா­கா­ண­ச­பைக்கு அர­சாங்கம் போடும் முட்­டுக்­கட்­டை­களைப் பார்க்­கும்­போது இதன் பின்­னணி விளங்­கு­கின்­றது. அர­சாங்கம் வடக்­கையும் கிழக்­கையும் பரி­பா­லித்­து­விட்டு சிங்­கள மேல்­லாண்­மையை உட்­பு­குத்­தவே முயல்­கின்­றது. தமிழ் மக்­களும் தமிழ் பிர­தி­நி­தி­களும் இதனை உல­குக்கு எடுத்துச் சொல்ல முன்­வ­ர­வேண்டும்.
இது­வரை உங்கள் தலை­மை­யி­லான அணியின் ஒத்­து­ழைப்பு பூர­ண­மாக வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது. இது தொட­ர­வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும். நாடு பூரா­க­வு­முள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எந்தப் பிரச்­சினை ஏற்­பட்­டாலும் அதுற்கு முகம்.கொடுக்க நாம் பின்­நிற்க மாட்டோம்.
வடக்கில் நில ஆக்­கி­ர­மிப்பு தொடர்ந்­து­வ­ரு­கின்­றது. ஆல­யங்கள்இ வீடுகள் அதி­பா­து­காப்பு வல­யப்­ப­கு­திக்குள் இடித்து அழிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு அழிக்­கப்­படும் ஆல­யங்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு நான் கடந்­த­வாரம் சென்ற போது இரா­ணு­வத்­தினர் என்னை தடுத்து நிறுத்­தி­விட்­டனர். இத்­த­கைய செயல்கள் இனியும் தொடர்ந்தால் இரா­ணு­வத்­தையும் மீறி நான் அப்­பகு­திக்குச் செல்வேன்இ என்­மீது இரா­ணு­வத்­தினர் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தினால் அந்த மண்ணில் வீழ்ந்து உயி­ரி­ழக்கும் பாக்­கி­யத்தை நான் பெறுவேன் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இந்தச் சந்­திப்பில் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்கள் நல்­லையா கும­ர­கு­ரு­பரன், எஸ். ராஜேந்­திரன், மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர் வேலு­குமார், கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான வேலணை வேணியன், சண். குக­வ­ரதன், பிரி­யாணி குண­ரத்ன, கே.ரி. குரு­சாமி, எஸ். பாஸ்­கரா, லோரன்ஸ் பெர்­னாண்டோ ஆகியோர் இடம்­பெற்­றனர்.
இச்­சந்­திப்பு குறித்து ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­த­தா­வது;
பரஸ்­பர வேலைப்­பளு கார­ண­மாக தள்ளி போடப்­பட்­டி­ருந்த இந்த சந்­திப்பு இன்று இடம்­பெற்­றது. இதன் போது, வடக்கில் மக்கள் ஆணை­யுடன் தெரிவு செய்­யப்­பட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கும் கூட்­ட­மைப்பு நிர்­வா­கத்தை, முடக்கும் அரசின் செயல்­பா­டுகள் பற்­றிய நிலை­மை­களை முதல்வர் விளக்கி கூறினார். இவை­பற்­றிய உண்மை தக­வல்­களை சாதா­ரண சிங்­கள மக்­க­ளுக்கு எடுத்து கூறும்­படி வேண்­டுகோள் விடுத்தார்.
எதிர்­வரும் மேல்­மா­கா­ண­சபை தேர்­தலில், மேல்­மா­கா­ணத்தின் கொழும்பு, கம்­பாஹா, களுத்­துறை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் நமது கட்சி போட்­டி­யி­டு­வது பற்­றியும்இ இது தொடர்பில் அடுத்த வாரம் கொழும்பில் கூட­வுள்ள எங்கள் அர­சி­யல்­குழு கூட்­டத்தில் இறுதி முடிவு எடுக்கப்­ப­ட­வுள்­ளது பற்­றியும் நான், முதல்­வ­ருக்கு எடுத்து கூறினேன். அத்­துடன், தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை தொடர்பில் நான் கடந்த மாதம் முதல்­வ­ருக்கும், ஜனா­தி­பதிக்கும் எழுதி அனுப்­பி­யி­ருந்த கோரிக்­கைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
கைதிகள், தடுத்து வைக்­கப்­ப­டி­ருப்போர் தொடர்­பான விப­ரங்­களை சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்­திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்த அதிமுக்கிய மனிதநேய விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்ய ப்பட்டது.

Related Posts