இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

police_check-postவழமைக்கு மாறான முறையில் கடந்த மூன்று தினங்களாக ஏ9 வீதி யாழ். வளைவில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் உள்ள யாழ். வளைவு ( செம்மணி பகுதியில்) இராணுவத்தினர் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களால் வீதியில் செல்லும் வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றது.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பரவலாக காணப்பட்ட சோதனைச் சாவடிகள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து சாவடிகள் குறைக்கப்பட்டிருந்தன. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் இவ்வாறான சோதனைகள் இரவு , பகல் வேளைகளில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றிவித்துள்ளது.

அத்துடன் ஆனையிறவு பகுதியில் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பித்துள்ளதுடன் கடுமையாக முறையில் சொதனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பயணத்தினை மேற்கொள்பவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.