இரண்டு மோட்டார்சையிக்கிளை மோதிய ஹைஏஸ் வாகனம் தப்பிச் சென்றது

accidentஉடுவில் ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிகக்கப்பட்டுள்ளார்.

இச்சம்வம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

உறவினர் வீட்டிறக்குச் சென்று விட்டு மூன்று பிள்ளைகளும் தந்தையும் மோட்டார் சையிக்கிளில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஹைஏஸ் வாகனம் மோட்டார் சையிக்கிளை மோதியுள்ளது.

இதில் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் செந்துரன் றொசான் (வயது 12) என்பவர் படுகாயமுற்றநிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த ஹைஏஸ் வாகனம் நிறுத்தாது தப்பிச்சென்றதுடன் மற்றமொரு மோட்டார் சையிக்கிளையும் மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இது சம்பந்தமாக வைத்தியசாலை பொலிசாரின் அறிவுறுத்தலின் பெயரில் சுன்னாகம் தெல்லிப்பழை பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor