இரணை தீவு மக்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி!! 189 ஏக்கர் காணி விடுவிப்பு

இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் முதற்கட்டமாக இரணைதீவிலுள்ள 189 ஏக்கரை அளவிடுவதற்கு கடற்படை இணங்கியுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) முதற்கட்டமாக காணிகள் அளக்கப்படும்.

இவ்வாறு காணி அளக்கப்பட்டு விடுவிக்கப்பட்டால் அந்த மக்களும் இரணைத்தீவிலேயே மீன்பிடிக்கச் செல்லமுடியும். அங்கு ஒரு ராடார் கருவியை பொருத்திவிட்டு அதன் கதிர்வீச்சுக்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கடற்படையினர் சாக்குப் போக்குச் சொல்லி வருகின்றார்கள். ஆனால், கடற்படையினரும் அந்த ராடார் கதிர்வீச்சு படும் இடங்களில்தான் பணிகளை மேற்கொண்டவாறு இருக்கின்றனர். ஆகவே, இந்த ராடார் அங்கு ஒரு பிரச்சினையாகக் காணப்படாது. அவ்வாறு காணி விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறினால் மக்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபட முடியும்’ என கூறினார்.

Related Posts