இரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத் திட்டம் கைவிடப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கி.

eranaimaduஇரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்காது விடின் இத்திட்டத்தைக் கைவிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறித்த திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொழுதே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் கிளிநொச்சி மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டிய அம் மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்தைக் கைவிடுமாறும் கோரியிருந்தனர்.

இதற்கமைய இத்திட்டம் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் முற்றாகக் கைவிடப்படக்கூடிய சாத்தியங்கள் தோன்றியுள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.