இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை – அமைச்சர் குருகுலராஜா

இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை செயற்படவும் முடியாது என்று வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.

Kurukula-rajah-at-chavakachcherey

சாவகச்சேரி இந்து கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கல்லூரியின் முதல்வர் கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசிய கல்லூரியாக உருவாக அடித்தளமிட்ட தாபகர் வி. தாமோதரம்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது.

முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண கல்வி அமைசர் குருகுலராஜா

இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை செயற்படவும் முடியாது இதை மனதில் கொண்டு மாணவர்கள் நீங்களும் உங்களுடன் கல்விகற்கும் சக மாணவர்களுடைய குறைகளை கண்டு அவர்களை ஒதுக்கிவிடாது அவர்களையும் கல்வி மற்றும் விளையாட்டிலும் சேர்த்து ஈடுபட வேண்டும் என்றார்.

மேலும் ஆரம்பகாலத்தில் எல்லா மாணவர்களும் சேர்ந்து கல்லூரி கீதத்தை பாடுவார்ர்கள் ஆனால் இன்று பல பாடசாலைகளிள் அவ்வாறில்லாது மூன்று மாணவர்கள் ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று பாட ஏனைய மாணவர்கள் அசமந்தமாக நின்றுகொண்டிருக்கின்றனர் ஏன் இவ்வாறான ஒர் நிலைமை என்று கேள்வி எழுப்பினார்? எனவே எல்லா மாணவர்களையும் சேர்த்து கல்லூரிக்கீதத்திற்கு மதிப்பளித்து இசைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந் நிகழ்விற்கு வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிகலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ.திருநாவுக்கரசு வலயக்கல்வி பணிப்பாளர் கிருஸ்ணகுமார் ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.