இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை 2 1/2 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.