இன்று முதல் 2011, 2012 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள்

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று முதல் (14.09.2012) ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்படிவங்கள் இன்று முதல் எதிர்வரும் செப்ரம்பர் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் முன்னுரிமையின் அடிப்படையில் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.

மேலும், மாணவர்களை தமது விண்ணப்பப்படிவங்களை காலதாமதமின்றி முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது

Recommended For You

About the Author: webadmin