இன்று முதல் அக்கினிநாள் ஆரம்பம்: வெப்பநிலை அதிகரிப்பு

hot-sun-thermometerவருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.

இந்த அக்கினி நாள் காலங்களில் கிரகப் பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நாள்கள் எனவும், நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் (தானிய வகை) நாற்று நடும் வேலைகளை செய்யக் கூடாது எனவும், நிழல் தரு விருட்சங்களை கத்தி கொண்டு வெட்டி அழிக்கக் கூடாது என இந்து மத சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருப்பதுடன், இயலுமான அளவு மரங்களை போஷிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கின்றன.