இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகிறார் இந்தியப் பிரதமர்!

இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்பார்.

modi-2

பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார்.

இதன் பின்னர் சுமார் 90 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்திய கலாசரா மையத்துக்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டி வைப்பார்.

வட மாகாண ஆளுநரின் விருந்துபசாரத்தில் பங்கேற்கும் மோடி கீரிமலைப் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிப்பார்.

தொடர்ந்து கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோயிலில் வழிபாடுகளில் பங்கேற்று பின்னர் மன்னாருக்கு பயணமாவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மோடியின் பயணத்துக்காக இந்திய விமானப் படைக்கு சொந்தமான 3 ஹெலிகொப்டர்கள் இலங்கை வந்துள்ளன.

Related Posts