இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் தென்பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை சப்ரகமுவ மற்றும் வட மாகாணத்தின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.