இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசும் கூட்டமைப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் குறித்த தகவல்கள், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்தனர். ஆனால் அரசுக்கும் அவர்களுக்கும் இடையேயான அந்தப் பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுக்கும் மேலாக தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts