Ad Widget

இனப்படுகொலை என்பதை மறுத்தால், பதவி விலகுவேன் – சிவாஜி

இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்படுவதும் இனப்படுகொலை என்பதை வடமாகாணசபை ஏற்றுக்கொள்ள மறுத்தால், பதவியில் இருந்து விலகுவேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,நேற்று (20) தெரிவித்தார்.

sivaji

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற விடயத்தை உள்ளடக்கி பல்வேறு விதமான மக்கள் சாட்சியங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் வடமாகாண சபை இனப்படுகெலை என்று சொல்வதற்கு ஏன் தயங்குகின்றது.

இனப்படுகொலை என்பதை நாங்கள் சொல்ல வேண்டும் என்று தீர்மானங்களை வடமாகாண சபையில் கொடுக்கின்ற பொது பல்வேறு விதமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கூட்டமைப்பில் இருக்கும் சிலர் இதற்கு தடையாக இருக்கின்றனர்.

இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்படுவதும் இனப்படுகொலை என்பதை சர்வதேசத்துக்கு கூறிவைக்க விரும்புகிறோம்.

இதை வடமாகாண சபையில் நிறைவேற்றுவதற்கு ஏன் தடை விதிக்கின்றனர்.

தமிழ் கூட்டமைப்பினுடைய ஒரு சிலரினுடைய நிகழச்சி நிரல் நடவடிக்கையால், இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் எதிர்வரும் காலங்களில் என்னென்ன தில்லுமுல்லுகள் நடக்கப்போகின்றன என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இறந்துபோன மக்களினதும் போராளிகளினதும் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற நிலமை தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கின்றது என அவர் மேலும் கூறினார்.

Related Posts