இனந்தெரியாதோரின் தாக்குதலில் கிராம அலுவலர் காயம்

Fight Logoயாழ்ப்பாணம், நாயன்மார் கட்டுப் பகுதில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கிராம அலுவலர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.00 மணிளவில் இடம்பெற்றுள்ளது.

அரியாலைப் பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலரே காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை நாயன்மார் கட்டுப் பகுதில் உள்ள கடை ஒன்றில் நின்றிருந்த வேளை இலக்கத்தகடு அற்ற முச்சக்கரண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காயமடைந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ் வைத்திசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor