இந்திய வியாபாரி யாழில் கைது

arrest_1சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.