யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்து யாழ். பருத்தித்துறை பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தபோதே பருத்தித்துறை பொலிஸார் அவரை புதன்கிழமை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை பருத்தித்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்திய போது அவரை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.