இந்திய துணை தூதுவரின் செயலர் வீட்டில் திருட்டு

robberyஇந்திய துணை தூதுவரின் செயலாளர் வீட்டில் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பொருட்களில் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய தூதுவரின் செயலாளர் வெள்ளிக்கிழமை காலை இந்திய தூதரகத்திற்கு வேலைக்கு சென்று இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதன் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவே முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor