இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ். வைத்தியசாலை ஊழியர்களுக்கு அஞ்சலி

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

jaffna-hospital-stff

இன்று காலை 10.30 மணிக்கு உயிரிழந்த 21 ஊழியர்களின் உருவப்படங்களிற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22 ஆகிய திகதிகளில் இந்த படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் வைத்திய சாலையில் கடமையாற்றிய 21 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வைத்திய சாலை பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா, பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும் கலந்துகொண்டனர்.

1987 இல் அமைதிப்படை என்னும் பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளை இந்திய இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.