இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்புவது குறித்த பேச்சு இருநாட்டு பிரிதிநிதிகளுக்குமிடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்த சமயம் இது குறித்து பேசப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார்.
அகதிகளுக்கான ஐ.நா. மன்றம், ஐரோப்பிய ஒன்றியம் என்பன, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளன.
இதுகுறித்து அந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனைச் சந்தித்து பேசினர்.
இதன்போது இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படும் மக்களுக்காக வாழ்வாதார தொழில் உதவிகளை வழங்குவதற்கு அந்த நிறுவனங்கள் இலங்கைக்கு உதவ உறுதியளித்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.