இந்நியாவிலிருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவினை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்களை பருத்தித்துறை மணல்காடு பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.