இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றவர் கைது

arrestயாழ்.வல்வெட்டித்துறை கடலினூடாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீனவர்களுடன் சேர்ந்து படகொன்றில் இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தியா நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்த இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, வல்வெட்டித்துறையிலுள்ள தேநீர் கடையொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (20) இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட தருணத்தில் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor