இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாணத்திலும்!

இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் இன்று(15) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நான்காவது தடவையாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை பதில் இந்திய துணை தூதுவர் திரு.டி.எஸ்.டி மூர்த்தி ஏற்றிவைத்தார்.

india-1

இந்த நிகழ்வில் உரையாற்றிய பதில் இந்திய துணை தூதுவர் திரு.டி.எஸ்.டி மூர்த்தி, முன்னால் இந்திய துணைத்தூதுவர் திரு.வே.மகாலிங்கம் அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்ததுடன் வட மாகாணத்தில் இந்திய அரசால் செய்யப்படும் திட்டங்களையும் தெரிவித்தார்.

india-2

இந்த நிகழ்வில் இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.