இந்தியன் வங்கியின் 2ஆம் ஆண்டினை முன்னிட்டு மாதிரிக் கிராமமாக வட்டு வடக்கு தெரிவு

indianbankஇந்தியன் வங்கியின் யாழ்.கிளையின் இரண்டாம் ஆண்டினை முன்னிட்டு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வங்கியில் அதற்காக நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

இந்தியன் வங்கியின் யாழ்ப்பாண கிளையின் இரண்டாவது ஆண்டு நிறைவினையொட்டி வட்டு வடக்கு மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ். ஸரான்லி வீதியில் உள்ள இந்திய வங்கி கிளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் மாதிரி கிராம அபிவிருத்தித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்திலுள்ள சுமார் 77 குடும்பங்களுக்கு வாழ்வாதார கடனாக 4.23 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டது என வங்கியின் முகாமையாளர் சந்திரசேகரர் கூறினார்.