இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆரம்பவிழா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் சச்சின், அமிதாப்பச்சன், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி என, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் தொழிலதிபர்கள் பட்டாளம் பங்கேற்றது.

gallery-image-178194606

ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் பாணியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், நேற்று 12 ம் தேதி முதல் கொல்கத்தாவில் ஆரம்பித்தது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, கேரளா என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

கிரிக்கெட் வீரர்கள்:இதில் சென்னை அணிக்கு கேப்டன் தோனி, கேரளாவுக்கு ஓய்வு பெற்ற சச்சின், கோவா அணிக்கு விராத் கோஹ்லி, கொல்கத்தாவுக்கு கங்குலி என, கிரிக்கெட் வீரர்கள் சக உரிமையாளர்களாக உள்ளனர்.

பொலிவுட் நட்சத்திரங்கள்: தவிர, அபிஷேக் பச்சன் (சென்னை), ரன்பிர் கபூர் (மும்பை), சல்மான் கான் (புனே), ஜான் ஆபிரஹாம் (கவுகாத்தி) என, பொலிவுட் நடிகர்களும் இதில் உரிமையாளர்களாக உள்ளனர்

gallery-image-827802375

gallery-image-1081474726

மேலும் படங்களுக்கு..