இந்தியக் குழுவினரின் அரியாலை விஜயம்

India-ariyalaiயாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினனர்,நேற்று புதன்கிழமை மாலை யாழ் அரியாலைப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தையும் பார்வையிட்டனர்.

நேற்று மாலை 3.30 மணிக்கு குறித்த பகுதிக்குச் சென்ற இந்த குழுவினருக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தினூடாகப் பயன்பெற்ற பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பகுதியில் 420ற்கும் மேற்பட்ட மக்கள் வாழந்து வரும் நிலையில் 50 பேருக்கு மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவர்களுக்கும் இந்த திட்டத்தினூடாக பயன்பெற வாய்ப்பளிக்குமாறும் அம்மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனை கருத்திக்கொண்ட இந்திய தூதுக்குழுவினர், ‘யாழில் உள்ள இந்திய துணைத் தூதரம் ஊடாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தனர்.