வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் இதயச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காகவே முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், ‘கோல்டர்’ பரிசோதனை என்னும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.