இணையத்தில் சுற்றுலா விடுதி சேவை

turest-srilanka-internerஇலங்கையில் இன்று தொடக்கம் வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களை இணையத்தளத்தின் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயனடைவார்கள் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது, கடனட்டைகள் மற்றும் கைத்தொலைபேசி ஊடாக கட்டணங்களை செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 38 வனவிலங்கு சுற்றுலா விடுதிகளும், 40 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வருடத்திற்கு சுமார் 12 லட்சம் பேர் அவற்றை பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

www.dwc.gov.lk மற்றும் www.srilanka.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக குறித்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.