இணுவில் கந்தசுவாமி ஆலய மஹாகும்பாபிஷேகம்

வரலாற்றுப் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை 33 குண்டங்களில் ஆகுதியிட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

inuvil2

inuvil

ஏராளமாக பக்தர்கள் மஹாகும்பாபிஷேத்தில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்காக தென்னிலங்கையில் இருந்து இரண்டு யானைகள் கொண்டுவரப்பட்டதுடன் இரண்டு வெள்ளைக் குதிரைகளும் எடுத்துவரப்பட்டுள்ளன.

 

hourse-inuvil

நேற்று தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளைக் குதிரைகள் இரண்டும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் உற்சவத்தில் பங்கு பற்றின.

 

அங்கு இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தெல்லிப்பழை தூக்கையம்மன் ஆலயத்துக்கு வந்து அங்கும் இடம்பெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து ஆலயத்திற்கு பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

 

 

 

inuvil-elepahnt