இணுவிலில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞன் சி.ஐ.டி.யினரால் கைது

இணுவில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டத்தாக கூறப்படும் இளைஞன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை தனது தாயாருடனும், சகோதரியுடனும் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை இணுவில் பகுதியில் வைத்து அந்த இளைஞன் கடத்தப்பட்டதாக அவரது சகோதரியும் தாயும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் மேற்கொண்ட வேளை, குறித்த இளைஞன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தமக்கு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts