இணுவிலில் இளைஞன் கடத்தல்

முச்சக்கரவண்டியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலரே குறித்த இளைஞரை கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தாயும் சகோதரியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.