கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடக்கபட்ட பகுதிகளில் மருந்தகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்லை மூலம் பெறப்படும் ஓடர்களுக்கு அமைய நடமாடும் மருந்து வழங்கலை முன்னெடுக்குமாறு கோவிட் -19 ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் அனைத்து மருந்தகங்களையும் தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மருந்தகங்களைத் திறக்க அனுமதிப்பதாக செயலணி இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.
எனினும் அந்த அறிக்கை மீளப்பெறப்பட்டு திருத்தப்பட்ட புதிய அறிக்கை சில மணிநேரத்தில் மீள வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மருந்தகங்களை காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக இடம் கொண்ட பகுதிகள் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் இடர் கொண்ட பகுதிகள் செயலணியின் அறிக்கையில் வெளிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன என ஜனாதிபதி செயலகம் அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.