ஆளும் தரப்பினருக்குள் முட்டி மோதுவது நல்ல விடயம்: சி.வி.கே.சிவஞானம்

c-v-k-sivaganamஆளும் தரப்பினரிடையே முட்டி மோதுவது நல்ல விடயம். மக்கள் ஆளும் தரப்பினரை புரிந்து கொள்வதற்கு அடாவடித் தனம் நல்ல சந்தர்ப்பம்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும், தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலியே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள கட்சிகள் எதாவது ஒரு இலக்கினை உடையவர்கள். தமிழ் இனத்தின் விடுதலை நோக்கிய கருத்தியலில் ஒன்றுபட்டவர்கள். ஜனநாயக கருத்தியல் வேறுபாடு உள்ளவர்கள். ஆனால், ஆளும் தரப்பினர் அதிகார வர்க்க அடாவடி தனத்திற்கு பெயர் போனவர்கள். அவர்களின் அதிகாரப் போட்டியின் மத்தியிலேயே இந்த அடிபாடுகள் நடைபெறுகின்றன.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு அச்சுறுத்தம் வகையில், இந்த அடிபாடுகள் நடக்கின்றன. அவர்களுக்குள் முட்டி மோதுவது நல்ல விடயமாக பார்க்கின்றேன். எங்களின் மக்கள் ஆளும் தரப்பினரை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என அவர் குறிப்பிட்டார்.