ஆளுனரின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

vikneswaranஆளுனரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் கூடுதலான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

13ம் திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13ம் திருத்தச் சட்டத்தை விடவும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கம், தற்போது அந்த சட்ட மூலத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது.

மாகாணசபைகளுக்கு இடது கையில் வழங்கப்படும் அதிகாரங்களை மாகாண ஆளுனர்கள் வலது கையினால் எடுத்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.