வடக்கு மாகாண ஆளுநராக பளிஹக்கார இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் ஊடகவியலளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சாதரண நிகழ்வாகவே பதவியேற்பு இடம்பெறுவதன் காரணமாக இந்த நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனராம்.
இந்தநிலையில் 9.20 மணிக்கு வட மாகாண ஆளுநராக பளிஹக்கார பதவியேற்றுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.