ஆளுநரின் உரையினை மூவர் புறக்கணிப்பு

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

npc_flag-northern

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது வடமாகாண ஆளுநரின் கன்னியுரை இடம்பெற்றது. இதனை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் உரையினைப் புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.