ஆளுநரினால் வட மாகாண நிர்வாகத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது

appointmentவட மாகாணத்தில் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு வேண்டிய ஆளணியிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் புதிய நியமனங்கள் ஆளுநரினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நெற்றயதினம் நடைபெற்றது.

இதன்போது 7 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், 7 நெசவு போதனாசிரியர்களுக்கும், 2 சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன், தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர் திரு.சிவகரன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Recommended For You

About the Author: Editor