ஆலயங்களில் இசைக் கச்சேரிக்கு தடை

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் இரவு வேளைகளில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

ஆலயங்கள் அமைதியின் உறைவிடம் அங்கு அமைதியைக் குழப்பும் வகையில் கேளிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது.

அத்துடன், இசைக்கச்சேரிகளின் போது கைகலப்புக்கள் ஏற்பட்டு குழப்பங்களும் இடம்பெறுகின்றன. இது ஆலயங்களுக்கு பொருத்தப்பாடில்லாத செயற்பாடு.

இதனைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு தடை விதிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts