ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து இங்கிலாந்த பெண் கின்னஸ் சாதனை

இங்கிலாந்தின் பேர்க்ஷையர் பிராந்தியத்தின் ஸ்லவ்(Slough) பகுதியைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

girl-thadi-1

இவர் தனது முகத்தில் ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து சாதனை சொந்தமாக்கியுள்ளார்.

ஹார்னாம் கௌர் என்ற 24 வயதான இளம் மொடல் அழகியே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

இவரின் உடலில் ஆண்களில் சுரக்கும் ஓமோன்கள் அதிகம் சுரக்கின்றமையால் இவ்வாறு ஆண்களை போன்று தாடி வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹார்னாம் கௌர் ஆண்களுக்கு இனையாக தாடி வளர்த்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor