ஆரியகுளத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை

kulam-kalivuஆரியகுளத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் உள்ள முக்கிய குளமான ஆரியகுளம் கழிவுப்பொருட்களால் நிரம்பி வழிவதுடன் அதில் உள்ள நீர்,சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதுதொடர்பில் யாழ்.மாநர முதல்வரிடம் கேட்டபோது,

இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை அருகில் உள்ள காணியில் கொட்டுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவில் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.