ஆயுதப்போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது: தயா மாஸ்டர்

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

thaya-master

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட  ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர்.

இதன்போது குறுக்கிட்ட  தயா மாஸ்டர் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது  என்று அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.