ஆட்சி மாற்றத்துக்கு உதவிய இளையோரின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படும்! -ஜனாதிபதி!!

இளையோரின் அர்பணிப்பும் நவீன தொழில்நுட்பமுமே ஆட்சிமாற்றத்துக்கு உதவின. அத்தகைய இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படும். – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

may3-presedant

ஊடகங்கள் வாயிலாக நேரடி நேர்காணலில் ஜனாதிபதி மக்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கினர்.

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.

எனவே இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல. நாடாளுமன்ற உறுப்பிர்களின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டம் வெற்றியளிக்காது.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதே எனது நோக்கம்.- என அவர் தெரிவித்தார்.

Related Posts