ஆசிரியர் நலன் குறித்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு

mahinthaஆசிரியர்களின் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு ஆசிரியர்கள் சிறந்த மனநிலையில் இருக்க வேண்டும்.

சில மாகாணங்களில் போதிய ஆசிரியர்கள் காணப்படாமைக்கு, அவர்களுக்கான நலன் திட்டங்கள் போதுமானதாக அமையாமையே காரணம்.

இந்த நிலையில் அவ்வாறான வேலைத்திட்டங்களை உருவாக்கி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor