Ad Widget

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தினமான நாளை யாழ். நகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

Joshep-starlin2

மாலை 2 மணிக்கு யாழ்.நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் 2010 ஆம் ஆண்டிற்குப் பின் ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாமை, 2008 இற்கு பின் அதிபர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படாமை, இடமாற்றங்கள் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மீள் கையளிக்கப்படாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Posts