அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.