அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கையர் போட்டி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜகத் பண்டார, தமது கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய லேபர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

jagath-bandara

எதிர்வரும் ஜூலை 2ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தான், அங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) சென்ற நாள் முதல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்ததாக ஜகத் பண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜூலை 2ம் திகதி, கவனமாகவும், அவுஸ்திரேலியா மற்றும் எமது மக்களுக்கு எது சிறந்தது என ஆராய்ந்தும் வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts