‘அவளின் கதைகள்’ கண்காட்சி யாழில் ஆரம்பம்

avalin-kathailal-kankadchi‘அவளின் கதைகள்’ என்ற தொனிப்பொருளில் வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமானது.

‘விழுது’ ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியை பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

இலவசமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor